Imaginary Love

Vazhithunaiye

Par Vignesh Shivan, Leon James, Sid Sriram, Sanjana Kalmanje

Album : Dragon (Original Motion Picture Soundtrack)

👁️ 14 vues 📅 il y a 7 mois 🎵 0 genres 👥 0 collab.

Espace publicitaire
728x90

வானம் பார்த்துகிடந்தேனே மழையாய் வந்துவிழுந்தாயே
வழிதுணையே-வழிதுணையே நீயே

கண்டேன்-கண்டேன் என்னுடையவளை
தந்தேன்-தந்தேன் மிச்ச உயிரை
கண்டேன்-கண்டேன் என்னுடையவனை
தந்தேன்-தந்தேன் மிச்ச உயிரை

உற்று உன்னை பார்க்கையிலே
தோற்றுகிடைத்த தனிமையினை
கற்றுதந்த காதல் வலி விட்டுபோனதே

ஊர்கூடும் நல்ல-நல்ல தடங்களெல்லாம் உன்னை கூட்டிகொண்டு கைகோர்த்துகொண்டு
இதழ் சேர்த்துவைக்க நல்ல இடங்களெல்லாம் வா தேடி-தேடிபோவோம்
இதழ் சேர்ந்திருக்கும் அந்த நேரத்திலே விழிமூடி நீயிருக்கும் வேலையிலே
என்னென்ன வரம் வேண்டும் என்பதையே நான் வேண்டி-வேண்டிகேட்ப்பேன்

வானம் பார்த்துகிடந்தேனே மழையாய் வந்துவிழுந்தாயே
வழிதுணையே-வழிதுணையே
வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம் வா-வா ஓடிதிரிவோம் வா
என் துணையே, வழிதுணையே நீயே

கண்டேன்-கண்டேன் என்னுடையவளை
தந்தேன்-தந்தேன் மிச்ச உயிரை

இந்த நேரம் இனிப்பது போல எப்போதும் இருப்பாயா?
உச்சபட்ச ஆசைகொண்டேனே உன்னிடத்தினிலே
வெட்பம் குளிர் எது வந்தாலும் இதமாக இணைப்பாயா?
திக்குமுக்கு ஆடிபோகின்றேன்

நீர்வீழ்ச்சியின் நெற்றியின்மீது நிற்க்காமல் பொழிவது போல
உன் முத்தம் கொட்டிடவேண்டும் புருவம்தொடங்கி நுனிபாதம்வரை
எங்கேயோ பிறந்த என் அன்பே எனை தேடி வந்ததே போதும்
இனிவாழும் அத்தனை நாளும் மினுக்கும் மினு-மினுக்குமே

வானம் பார்த்துகிடந்தேனே மழையாய் வந்துவிழுந்தாயே
வழிதுணையே-வழிதுணையே
வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம் வா-வா ஓடிதிரிவோம் வா
என் துணையே, வழிதுணையே நீயே
Vazhithunaiye

Vazhithunaiye

Vignesh Shivan, Leon James, Sid Sriram, Sanjana Kalmanje

Style
Année
Album Dragon (Original Motion Picture Soundtrack)

Commentaires sur Vazhithunaiye

Partagez vos impressions sur cette chanson

Pas encore de commentaires.
Signaler un abus
Aidez-nous à améliorer notre service
Veuillez sélectionner un motif de signalement.
Vazhithunaiye