ICIBILLET.COM
ICIBILLET
Paroles de chanson
03/05/2026
Oru Devathai
Par Yuvan Shankar Raja
Album : Vaamanan
ஒரு தேவதை பார்க்கும் நேரமிது

மிக அருகினில் இருந்தும் தூரம் இது

இதயமே ஓ

இவளிடம் ஓ

உருகுதே ஓ ஓ ஓ ஓ

இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே

பார்க்காதே ஓ

என்றாலும் ஓ

கேக்காதே ஓ

என்னை என்ன செய்தாய் பெண்ணே

நேரம் காலம் மறந்தேனே

கால்கள் இரண்டும் தரையில் இருந்தும்

வானில் பறக்கிறேன்

என்னவாகிறேன் எங்கு போகிறேன்

வழிகள் தெரிந்தும் தொலைந்து போகிறேன்

காதல் என்றால் ஓ

பொல்லாதது

புரிகின்றது ஓ ஓ

கண்கள் இருக்கும் காரணம் என்ன

என்னை நானே கேட்டேனே

உனது அழகை காண தானே

கண்கள் வாழுதே

மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில்

இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்

உன் பாதத்தில் முடிகின்றதே

என் சாலைகள் ஓ

இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே
ஒரு தேவதை பார்க்கும் நேரமிது

மிக அருகினில் இருந்தும் தூரமிது

Imprimé depuis ICIBILLET.COM - 03/05/2026 02:28